தமிழகத்தில் 6 ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழக அரசின் பள்ளிக்கல்வித் துறை ஆணையர் உட்பட 6 அதிகாரிகளை இடமாற்றம் செய்வதாக தமிழக அரசின் தலைமைச் செயலர் சண்முகம் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளார்.
- இதன்படி, சமரச சிக்ஷா திட்ட கூடுதல் இயக்குனர் என் வெங்கடேஷ் என்பவர் பள்ளிக்கல்வித் துறை ஆணையராக மாற்றப்பட்டுள்ளார்.
- பள்ளிக்கல்வித் துறை ஆணையர் சிஜி தாமஸ் தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழக மேலாண் இயக்குநராக மாற்றப்பட்டுள்ளார்.
- ஈரோடு வணிக வரித்துறை இணை ஆணையர் கிராந்தி குமார் பதி பழனி தண்டபாணி கோயில் நிர்வாக அலுவலராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
- காஞ்சிபுரம் உதவி ஆட்சியர் சரவணன் ஈரோடு வணிக வரித்துறை இணை ஆணையராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
- மாநில டாஸ்மாக் துறை இயக்குனர் கிர்லோஷ் குமார் தமிழ்நாடு குடிசை மாற்று வாரிய மேலாண் இயக்குனராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
- மாநில மற்றும் கலால் துறை ஆணையர் மோகன் டாஸ் மாக் மேலாண் இயக்குனராக பொறுப்பேற்றுள்ளார்