Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

ஊராட்சி மன்றத் தலைவரை தரையில் அமர வைத்த விவகாரம் – ஊராட்சி செயலாளர் கைது

ஊராட்சி மன்ற தலைவரை தரையில் அமர வைத்த விவகாரத்தில் ஊராட்சி செயலாளர் சிந்துஜா வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே தெற்கு திட்டாய் ஊராட்சி மன்ற தலைவர் ராஜேஸ்வரி ஆதிதிராவிட சமூகத்தைச் சேர்ந்தவர். அந்த ஊராட்சியில் துணைத்தலைவர் ஊராட்சி செயலாளர் மற்றும் உறுப்பினர்கள் என அனைவரும் வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் ஆவர். இந்நிலையில் ஜூலை 17-ஆம் தேதி ஊராட்சி மன்ற கூட்டம் நடந்தது. ஊராட்சி தலைவர், ஊராட்சி துணைத்தலைவர் மற்றும் உறுப்பினர்கள் அழைக்கப்பட்டிருந்தனர். அப்போது ஊராட்சி மன்ற தலைவர் ராஜேஸ்வரி தரையில் அமர வைக்கப்பட்டார். அவர் ஆதிதிராவிட சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் அவமதிக்கப்பட்ட புகார் எழுந்தது.

இதுதொடர்பான புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இதனைத்தொடர்ந்து தெற்கு திட்டாய் ஊராட்சி துணைத்தலைவர் திரு. மோகன்ராஜ் ஊராட்சி செயலாளர் திரு. சிந்துஜா ஆகியோர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மேலும் சிந்துஜாவை மாவட்ட ஆட்சியர் சஸ்பெண்ட் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்நிலையில் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட சிந்துஜா தற்போது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.

Categories

Tech |