சிதம்பரம் அருகே ஆதிதிராவிட ஊராட்சி மன்ற தலைவரை கீழே அமர வைத்த விவகாரத்தில் கடலூர் கூடுதல் ஆட்சியர் இராஜகோபால் சுங்காராவ் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே தெற்கு திட்டாய் பஞ்சாயத்து துணைத்தலைவராக ராஜேஸ்வரி என்பவரும் துணைத்தலைவராக உள்ள மோகன் என்பவரும் உள்ளனர். ஊராட்சி மன்ற தலைவர் பட்டியல் இனத்தைச் சேர்ந்தவர் என்பதால் கடந்த ஜூலை 17-ஆம் தேதி நடந்த ஊராட்சி மன்ற கூட்டத்தில் ராஜேஸ்வரியை தரையில் அமர வைத்து கூட்டம் நடத்தியுள்ளனர். இதுதொடர்பான புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவியது.
இதனை தொடர்ந்து புவனகிரி காவல்துறையினர் நடத்திய விசாரணையில் இந்த சம்பவம் உண்மை என்று தெரிய வந்தது. இதனைதொடர்ந்து துணைத்தலைவர் மோகன் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் இது குறித்து கடலூர் கூடுதல் ஆட்சியர் ராஜகோபால் சுங்காராவ் விசாரணை நடத்தி வருகிறார்.