Categories
உலக செய்திகள்

“மனைவியுடன் விவாகரத்து” முறைப்படி இளைஞனுடன் மருத்துவர் திருமணம்….!!

மனைவியை விவாகரத்து செய்துவிட்டு இந்திய மருத்துவர் இளைஞனை திருமணம் செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர் சரத் பொன்னப்பா இவருக்கு திருமணம் முடிந்த நிலையில் அமெரிக்காவில் மருத்துவராக பணிபுரிந்து வருகின்றார். அங்கு வட இந்தியாவை சேர்ந்த இளைஞர் தருண் சந்திப் தேசாய் என்பவர் சரத் பொன்னப்பாவிடம்  நட்புடன் பழகி வந்தார். ஆரம்பகட்டத்தில் நெருங்கிய நண்பர்களாக இருந்த இவர்கள் நாளடைவில் ஓரின சேர்க்கையாளராக மாறிவிட்டனர். இதனால் இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து சரத் பொன்னப்பா தனது மனைவியை விவாகரத்து செய்தார்.

இதனைத் தொடர்ந்து கடந்த 25ஆம் தேதி கலிபோர்னியாவில் வைத்து சரத் பொன்னப்பா மற்றும் தருண் சந்திப் தேசாய் இருவரும் முறைப்படி திருமணம் செய்து கொண்டனர். கொடவா சமுதாயத்தைச் சேர்ந்தவர்களின் பாரம்பரிய உடையை அணிந்து தலைப்பாகை, நீண்ட வாள் உள்ளிட்டவற்றுடன் கொடவா சமுதாய பாரம்பரிய முறையில் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

இதுகுறித்து குடகு கொடவா சமுதாயத்தின் நிர்வாகி கூறுகையில், “இவர்களது திருமணம் இயற்கைக்கு எதிரானது. இவ்வாறு திருமணம் செய்பவர்கள் வெகுநாட்கள் சேர்ந்து இருக்க முடியாது. வெளிநாடுகளில் இதுபோன்ற திருமணங்கள் சகஜம். ஆனால் நம் கலாச்சாரத்திற்கு இது சரிவராது” என மிகுந்த ஆவேசத்துடன் கூறியுள்ளார்.

Categories

Tech |