இரண்டு நாள் மழைக்கு கூட தாங்காமல் அணையின் பக்கவாட்டில் சரிந்தது என கிராம மக்கள் முற்றுகையிட்டனர்.
புதுச்சேரி மண்ணாடிப்பட்டு கெட்டிப்பட்டு கிராமத்தில் சங்கராபரணி ஆற்றின் குறுக்கே சுமார் 6.30 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட படுகை அணை மூன்றே மாதங்களில் சேதமடைந்துள்ளது. இரண்டு நாள் மழைக்கு கூட தாங்காமல் அணையின் பக்கவாட்டு சுவர்கள் சரிந்து விழுந்ததால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் ஆய்வு செய்ய வந்த அதிகாரிகளை முற்றுகையிட்டனர்.