கேரளா தங்கம் கடத்தல் வழக்கில் சிறையில் உள்ள ஸ்வப்னா சுரேஷ் மீது அன்னிய செலாவணி பாதுகாப்பு மற்றும் கடத்தல் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
கேரள தலைநகர் திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்தில் கடந்த ஜூலை 5 ஆம் தேதி ஐக்கிய அரபு அமீரக தூதரகத்தின் பெயரில் 15 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கம் கடத்திவரப்பட்டதை சுங்கத்துறை அதிகாரிகள் கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர். இந்த வழக்கு தேசிய புலனாய்வு முகமை சுங்கத் துறை மற்றும் அமலாக்கத் துறை ஆகியவை விசாரித்து வருகின்றனர். வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் கேரளா அரசின் தகவல் தொழில்நுட்பத் துறை பிரிவில் மக்கள் தொடர்பு அதிகாரியாக பணியாற்றிய சுவப்னா சுரேஷ் உட்பட 20 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஸ்வப்னா சுரேஷ் திருச்சூர் மாவட்டத்தில் வியூரில் உள்ள மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டு உள்ளார். இந்நிலையில் ஸ்வப்னா சுரேஷ் மீது அன்னிய செலாவணி பாதுகாப்பு மற்றும் கடத்தல் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இது தொடர்பாக அவரை கைது செய்ய சுங்கத்துறை பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது