Categories
அரசியல்

தன்னை விளம்பரப்படுத்தி… கொள்கிறார் மு.க.ஸ்டாலின்… அதனால் கேட்கிறார் அறிக்கை… அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்…!!!

ஸ்டாலின் ஒரு அறிக்கை நாயகன் என்பதால், தன்னை விளம்பரப்படுத்திக் கொள்வதற்கு வெள்ளை அறிக்கை, கருப்பு அறிக்கை கேட்கிறார் என அமைச்சர் உதயகுமார் கூறியுள்ளார்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், அதிமுக ஆட்சியில் பெறப்பட்ட முதலீடுகள் பற்றியும், வேலை வாய்ப்புகள் பற்றியும் வெள்ளை மாளிகை வெளியிட வேண்டும் எனவும், கொரோனா காலகட்டத்தில் கொள்முதல் பற்றி தனி வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் எனவும் வலியுறுத்தி இருக்கிறார். இதுகுறித்து அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறுகையில், “முதல்வர் ஒரு செயல் நாயகன். அதனால் செயல்படுகிறார்.

ஆனால் ஸ்டாலின் ஒரு அறிக்கை நாயகன். அதனால் அறிக்கை கேட்கிறார். ஸ்டாலின் தன்னை விளம்பரப்படுத்தி கொள்வதற்காகவே வெள்ளை அறிக்கை மற்றும் கருப்பு அறிக்கை கேட்கிறார். வருகின்ற தேர்தலில் தேசிய கட்சிகள் கூட்டணியாக இருந்தாலும்,மாநில கட்சிகள் தான் கூட்டணி தலைமையில் கட்டாயம் இருக்கும்”என்று அவர் கூறியுள்ளார்.

 

Categories

Tech |