செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அருகே கிழக்கு கடற்கரை சாலையில் கண்டெய்னர் வேன் கார் மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர்.
புதுச்சேரியை சேர்ந்த சிலர் சென்னையில் உறவினர் இல்ல நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக இன்று காலை சென்னையை நோக்கி ஒரே காரில் வந்து கொண்டிருந்தனர். அப்போது சென்னையிலிருந்து கன்டெய்னர் வேன் ஒன்று புதுச்சேரி நோக்கி சென்ற போது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து மோதி விபத்துக்குள்ளானது. இதில் காரில் பயணம் செய்த செந்தில், முருகன், ஜெயபாலன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். சுபா, மூர்த்தி, சுந்தரவரதரார் ஆகிய மூவரும் காயமடைந்து தீயணைப்புத் துறையினரின் உதவியுடன் மீட்கப்பட்ட செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.