சப்பாத்தி குருமா செய்ய தேவையான பொருட்கள்:
பெரிய வெங்காயம் – 4 பொடித்தது
கொத்தமல்லி தழை – 1 கைப்பிடி
பெங்களூர் தக்காளி – 3
பெருங்காயம் – 2 சிட்டிகை
மஞ்சள்தூள் – 2 சிட்டிகை
சாம்பார்பொடி – 3 டீஸ்பூன்
சர்க்கரை – அரை டீஸ்பூன்
உப்பு – தேவைக்கேற்ப
எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்
கடுகு – அரை டீஸ்பூன்
புதினா தழை – 1 கைப்பிடி
செய்முறை:
மிக்ஸி ஜாரில், தக்காளி, புதினா, கொத்தமல்லி இலையை நன்றாக அரைத்து எடுத்து கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, பெருங்காயம், பொடியாக நறுக்கிய வெங்காயம், மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும்.
அதனுடன் ஏற்கனவே அரைத்த விழுது, உப்பு, சாம்பார் பொடி சேர்த்து வதக்கி இறக்கவும். இறுதியில் சர்க்கரையை சிறிது சேர்த்து கிளறி இறக்கினால் சூப்பரான சப்பாத்தி சைடிஷ் தயார்.