Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

கசப்பு இருக்காது…ருசி அதிகமா இருக்கும்…முடக்கத்தான் கீரை தோசை…!!

முடக்கத்தான் தோசை செய்ய தேவையான பொருட்கள்:

பாசிப்பருப்பு                  – 100 கிராம்
முடக்கத்தான் கீரை   – 200 கிராம்
புழுங்கல் அரிசி            – 250 கிராம்
இஞ்சி                                  – ஒரு சிறிய துண்டு
பூண்டு                                – 4 பல்
எண்ணெய்                      – 100 மில்லி
உப்பு                                    – தேவையான அளவு

செய்முறை :

முடக்கத்தான் கீரையை நன்கு சுத்தம் செய்து எடுத்து கொள்ளவும். பாசிப்பருப்பை 1 மணி நேரம் ஊற வைத்து எடுத்துக்கொள்ள வேண்டும். அரிசியை 2 மணி நேரம் ஊற வைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

பின்னர் ஊற வைத்த பாசிப்பருப்பு மற்றும் புழுங்கல் அரிசி, தோல் நீக்கிய முடக்கத்தான் கீரை, இஞ்சி சிறு துண்டு, பூண்டு 4 பல், உப்பு(தேவைக்கேற்ப) ஆகியவற்றை சேர்த்து நைசாக அரைக்கவும்.

அடுப்பில் தோசைக்கல்லை வைத்து எண்ணெய் விட்டு அரைத்த மாவை தோசையாக ஊற்றி இரண்டு பக்கமும் வேகவைத்து எடுத்தால் ருசியான முடக்கத்தான் கீரை தோசை ரெடி.

Categories

Tech |