கர்நாடகா,மகாராஷ்டிரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் தமிழ்வழிப் பள்ளிகளை திறப்பதற்கு தமிழக முதல்வர் நடவடிக்கை எடுத்து வருவதாக அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.
ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையம் அருகே இருக்கின்ற பெரிய கொடிவேரி பேரூராட்சியில் சந்தை திறனை மேம்படுத்துவதற்கு பூமி பூஜை இன்று நடந்தது.அதில் தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கலந்து கொண்டு பூமி பூஜையை துவக்கி வைத்தார். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசும்போது, “கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் மூலம் அனைத்து தனியார் பள்ளிகளிலும் விண்ணப்பிக்க கால அவகாசம் மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது. கட்டாயக் கல்வித் திட்டத்திற்காக தற்போது வரை தனியார் பள்ளிகளுக்கு 943 கோடி ரூபாய் நிதி வழங்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டிற்காக வழங்கவேண்டிய 372 கோடி ரூபாயை முதல்வர் விரைவில் வழங்க நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்.
மேலும் புதிய கல்விக் கொள்கையை மழலையர் பள்ளிகளுக்கு மத்திய அரசு நிதி வளர்ந்த உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆனால் இதற்கு முன்னதாக தமிழக அரசு இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்தி இருக்கிறது. கர்நாடக மாநிலத்தில் தமிழ்வழிப் பள்ளியை திறப்பதற்கு தமிழக முதல்வர் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்.அதுமட்டுமன்றி மகாராஷ்டிராவில் மூடப்பட்ட தமிழ்வழிப் பள்ளியை மீண்டும் திறப்பதற்கு முதல்வர் ஆலோசனையின் படி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.அதிமுகவில் 11 பேர் கொண்ட வழிகாட்டுதல் குழுவில் எனது பெயர் இடம்பெறாதது மற்றற்ற மகிழ்ச்சி என்று செய்தியாளர்கள் அளித்த கேள்விக்கு அவர் பதில் அளித்தார். அதனை நான் மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்கிறேன்”என்று அவர் கூறியுள்ளார்.