உலகின் தலை சிறந்த கேப்டன் என்று கருதப்பட்ட தோனி தற்போது பல தவறான முடிவுகளை எடுத்து வருகிறார் அவரது கணிப்புக்கள் பொய்யாகி வருகின்றன என்ற விமர்சனம் எழுந்துள்ளது இதனைத் உடைத்து தெரிந்து சென்னை அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்து செல்வாரா தோனி.
2007-ல் டி20 உலக கோப்பை 2011-ல் ஒரு நாள் சர்வதேச உலக கோப்பை 2013-ல் ஐஐசிசி சாம்பியன் டிராபி என மூன்று உலக கோப்பையை பெற்று தந்த உலகின் ஒரே கேப்டன் தோனி மட்டுமே. மைதானத்தில் பில்டிங் செட் செய்வதில் தோனியை மிஞ்ச ஆள் இல்லை என்னும் அளவிற்கு மிகச்சரியாக பில்டிங் செட் செய்வார் எதிர் அணியில் களமிறங்கும் ஒவ்வொரு பேட்ஸ்மேன் திறமையை நுணுக்கமாக அறிந்து அதற்கு ஏற்றார்போல் பந்துவீச செய்து விக்கட்டுகளை எடுப்பார். பில்டரை தாண்டி பவுடருக்கு செல்லும் பட்சத்தில் உடனடியாக அங்கு பில்டிங் உத்தியை அல்லது பில்டரை மாற்றுவார். ஜெய் சிங்கின் போது திடீரென விக்கெட்டுகளை இழந்து இந்தியா தடுமாறும் சமயத்தில் பேட்டிங் வரிசையை மாற்றி இறங்கி அணியை வெற்றிக்கு இட்டுச் செல்வார். பந்து வீச்சின் போது டேப் ஓவர்களை யாரை பந்துவீச சொல்வார் என்பதை கணிக்கவே முடியாது. அவரால் வளர்க்கப்பட்ட பந்துவீச்சாளர் பூம்புற, புவனேஷ் குமார், அஸ்வின் ஆகியோர் தான் சரியாக கணித்து தன்னை யாராலும் கணிக்க முடியாத ஒரு தலைவனாக வழங்கியவர் தோணி.
ஆனால் ஒருநாள் போட்டிகளில் திடீரென கேப்டன் பதவியில் இருந்து தொடர்ந்து விலகியது முதல் அவரது செயல்பாடு எல்லாமே விமர்சனம் ஆகிவருகிறது. தொடர்ந்து பல போட்டிகளில் மோசமான பேட்டிங்கை வெளிப்படுத்திய போது தோனியின் ஓய்வு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. ஆனால் அவர் தொடர்ந்து மௌனம் காத்து வந்தார். நீண்ட காலமாக தோனி போட்டிகளில் விளையாடாமல் ஓய்வும் அறிவிக்காமல் இருந்தது. அவர் தமது விளம்பர வருவாயை கருத்தில் கொண்டு இதைச் செய்கிறார் என்றும் பலர் கேள்விகளை எழுப்பினர். அதன் பிறகு பல ஒருநாள் தொடர்களில் அவர் தேர்வு செய்யப்படவில்லை. இந்த இந்த நிலையில்தான் சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். ஒரு பெரிய அழுத்தம் எல்லா திசைகளிலும் இருந்து வந்ததால் மட்டுமே தோனி ஓய்வை அறிவித்தார்.
அதன் பிறகு தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை அவர் வழி நடத்துவதிலும் தொடர் சறுக்கல்கள் செயற்பட்டு வருகின்றனர். 6 போட்டிகளில் நான்கில் தோல்வியை தழுவியுள்ளது சி.எஸ்.கே தல தோனி தொடர் சறுக்கல்களை சந்தித்து வருவது அவர்களது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. உலகின் ஆகப்பெரிய விளையாட்டு வீரர்கள், அரசியல் தலைவர்கள், சினிமா ஹீரோக்கள் யாராக இருந்தாலும் சரி அவர்களின் கணக்கு எல்லா நேரங்களிலும் சரியாக இருப்பதில்லை. வெற்றி தோல்வி என்பதை ஒத்துக்கொள்ளும் ரசிகர்கள் தோல்வி மேல் தோல்வி என்பதை ஏற்றுக் கொள்வதில்லை வாழ்வில் கடைசி தருணங்களில் சறுக்கல்களை சந்தித்து ஒதுங்கி ஓய்வு பெறுவது விதியின் கணக்கு இந்த கணக்கை உடைத்தெறியும் வல்லமையையும் சில ஹீரோக்களுக்கு இருந்ததோடு அந்த பட்டியலில் தல தோனி வருவாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.