Categories
உலக செய்திகள்

எங்கள் நாட்டில் கொரோனா இல்லை… நாங்கள் விடுபட்டு விட்டோம்… வட கொரிய அதிபர்… பெருமிதப் பேச்சு…!!!

வடகொரிய நாட்டில் ஒருவருக்கு கூட கொரோனா பாதிப்பு இல்லை என்று அந்நாட்டு அதிபர் பெருமிதம் கூறியுள்ளார்.

வடகொரியாவில் ஆளும் தொழிலாளர் கட்சியின் 75வது ஆண்டு நிறுவன தின கொண்டாட்டம் நேற்று நடந்தது. அதில் அந்நாட்டின் தலைவர் கிம் ஜான் அன் பங்கேற்றார். அதன்பிறகு ராணுவ அணிவகுப்பு அங்கு நடந்தது. அப்போது பார்வையாளர்கள் முன் உரையாற்றிய அவர் பேசும்போது, “கொரோனா வைரஸ் பாதிப்பு ஒருவருக்கு கூட ஏற்படாமல் நல்ல உடல் ஆரோக்கியம் உடன் மக்கள் இருப்பதால் அவர்களுக்கு நான் நன்றி தெரிவித்து கொள்கிறேன்.

உலக நாடுகள் முழுவதும் தீங்கு விளைவித்துக் கொண்டிருக்கும் அந்த கொடூர தொற்றில் இருந்து நம்முடைய மக்கள் அனைவரையும் நாம் காப்பாற்றி உள்ளோம். இது நம்முடைய இயற்கையான பணி.அதுமட்டுமன்றி நம்முடைய கட்சிக்கு கிடைத்துள்ள மிகப்பெரிய வெற்றி. ஆனால் இந்த வெற்றியை தொடர்ந்து, மக்கள் ஆரோக்கியத்தை காணும்போது நன்றி கூறுவதைத் தவிர வேறு வார்த்தைகள் எதுவும் என்னிடம் கிடையாது”என்று அவர் கூறியுள்ளார்.

 

Categories

Tech |