உத்தரப்பிரதேசம் மாநிலம் ஹத்ராஸ்ஸில் இளம்பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு உயிரிழந்த சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு மத்திய அரசு உத்தரவிட்டு உள்ளது.
உத்தரபிரதேச மாநிலத்தில் ஹத்ராஸ்ஸில் பாலியல்வன்முறைக்கு ஆளானதாக கூறப்பட்ட பட்டியல் இனம் இளம்பெண் உயிரிழந்த சம்பவத்தில் சிபிஐ விசாரணைக்கு மாநில அரசு பரிந்துரைத்தது. மேலும் வழக்கை உச்ச நீதிமன்ற கண்காணிப்புடன் சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று அம்மாநில அரசு கூறுகிறது. இந்த வழக்கு குறித்து விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டது.
ஒரு வாரத்துக்குள் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டது. இந்நிலையில் உத்தரப் பிரதேச அரசின் பரிந்துரையை ஏற்று ஹத்ராஸ் சம்பவம் பற்றி விசாரிக்க சிபிஐக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதை அடுத்து ஹத்ராஸ் சம்பவம் பற்றிய விசாரணையை சிபிஐ துவக்கியுள்ளது