Categories
ஈரோடு திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

பருவ மழை வெள்ளம் காலங்களில் தற்காத்துக் கொள்வது எப்படி…?

வடகிழக்கு பருவ மழை வெள்ளம் காலங்களில் பொது மக்கள் எவ்வாறு தங்களை தற்காத்துக் கொள்வது என்பது குறித்த விழிப்புணர்வு ஒத்திகை தீயணைப்பு மற்றும் மீட்பு துறை சார்பில் அக்கரைப்பேட்டையில்  நடைபெற்றது.

இயற்கை பேரிடர் காலங்களில் காயமடைந்தவர்களை எந்தெந்த முறைகளில் மீட்பது, கட்டட இடர்பாடுகளில் உயிர் சேதம் ஏற்படாதவாறு பாதுகாப்பாக எப்படி தப்பித்து கொள்வது, தீ விபத்துகள் ஏற்படும் போதும் எவ்வாறு தங்களை தற்காத்துக் கொள்வது என்பன உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த விழிப்புணர்வு ஒத்திகை நிகழ்ச்சி அக்கரைப்பேட்டையில் நடைபெற்றது.

இதில் தீயணைப்பு வீரர்களுடன் செய்முறை விளக்கம் காண்பித்தனர். பேரிடர் காலங்களில் பயன்படுத்தக்கூடிய பொருட்கள் தொடர்பான விழிப்புணர்வு கண்காட்சி திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ளது. மழை காலங்களில் வெள்ளத்தில் சிக்கியவர்களை எவ்வாறு காப்பாற்றுவது என்பது குறித்து நெல்லை மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்புக் குழுவினர் ஒத்திகை நடத்தினர்.

இதனை தொடர்ந்து மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் அதிகாரிகளுடன் நடை பெற்ற ஆலோசனை கூட்டத்தில் பருவ மழையை எதிர்கொள்வது குறித்தும், கொரோனா தொற்று  கட்டுப்பாடுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. ஈரோடு மாநகர காவல்துறையின் சார்பில் ஈரோடு பேருந்து நிலையத்தில் பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு முகாம் ஈரோடு பேருந்து நிலையத்தில் நடைபெற்றது.

கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திருமதி கணகேஸ்வரி  கலந்துகொண்டு பெண் குழந்தைகளின் பாதுகாப்பு குறித்த ஆலோசனைகளை வழங்கினார். மாவட்டம் முழுவதும் விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்பட உள்ளதாக கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திருமதி கணகேஸ்வரி தெரிவித்துள்ளார்.

Categories

Tech |