90 வருடங்கள் கழித்து மைனே தீவில் குழந்தை பிறந்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது
அமெரிக்காவில் உள்ள மைனே தீவில் 90 வருடங்கள் கழித்து இரண்டு வாரங்களுக்கு முன்பு குழந்தை ஒன்று பிறந்துள்ளது. குழந்தையின் பெற்றோர் தற்செயலாக மைனே தீவிலிருந்து பவுண்டேஷன் தீவுக்கு செல்ல திட்டங்கள் போட்டு இருந்தனர். அங்கேயே குழந்தையை பெற்றுக் கொள்ளவும் முடிவு செய்தனர்.
கல்வின் கூலிட்ஜ் என்பவர் அமெரிக்க அதிபராக இருந்ததில் இருந்தே மைனே தீவில் குழந்தை பிறக்கவில்லை. கடைசியாக 1927ஆம் ஆண்டு தான் அந்த தீவில் குழந்தை பிறந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து குழந்தையின் தந்தை கூறுகையில் “கடைசியாக இந்த தீவில் பிறந்தவர் 2005 ஆம் ஆண்டு இறந்து விட்டார் என்பதே எனது குழந்தை பிறந்த பிறகுதான் தெரிந்து கொண்டேன்” என கூறியுள்ளார்.