Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

2021-ஆம் ஆண்டில் மேலும் ஒரு புதிய வைரஸ்- பஞ்சாங்க கணிப்பாளர்கள் எச்சரிக்கை…!!

2021 ஆம் ஆண்டில் மேலும் ஒரு புதிய வைரஸ் காய்ச்சல் பரவ வாய்ப்பு உள்ளதாக பஞ்சாங்க கணிப்பாளர்கள் எச்சரித்துள்ளனர்.

உலகம் முழுவதும் வாழும் தமிழ் மக்களால் கடைப்பிடிக்கப்படும் கூடிய பஞ்சாங்கம் கடந்த 3 ஆண்டுகளாக திருவாரூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் கணிக்கப்பட்டு வருகிறது. சார்வரி எனும் தமிழ் வருடம் வரும் பங்குனி மாதத்தோடு நிறைவு பெறுவதால் 2021 ஆம் ஆண்டு சித்திரை மாதம் முதல் 2022ஆம் ஆண்டு பங்குனி மாதம் வரையிலான டிலவ என அழைக்கப்படும் தமிழ் வருடத்திற்கான பஞ்சாங்கத்தை கணித்து தரக்கூடிய ஆகம வல்லுனர்களின் கருத்தாய்வு கூட்டம் திருவாரூர் மாவட்டம் திலதர்ப்பணபுரியில் நடைபெற்றது.

ஸ்ரீ ஸ்வர்ண பள்ளி அம்பிகா சமேத ஸ்ரீ முக்தீஸ்வரர் ஆலயத்தின் வேத சிவாகம பாடசாலையில் திருக்கண்ணங்குடி பாலமணி சிவாச்சாரியார், பழனி பாலசுப்ரமணிய சிவாச்சாரியார், தளபதி டாக்டர் சுவாமிநாத சிவாச்சாரியார் தலைமையில் கருத்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆகம வல்லுனர்கள்  கலந்துகொண்டு பிளவர் தமிழ் வருடத்திற்கான பஞ்சாங்கத்தை கணித்து வழங்கினர்.

பாடசாலையில் பயிலும் மாணவர்கள் நேரிலும் இலங்கை மற்றும் மாநிலம் முழுவதும் உள்ள பஞ்சாங்க ஆசிரியர்கள் மற்றும் பதிப்பாளர்கள் ஆன்லைன் மூலமாகவும் கலந்து கொண்டனர். 2021 ஆம் ஆண்டில் கார்த்திகை மாதத்தில் நடைபெறக்கூடிய குரு பெயர்ச்சி வரையில் இயற்கை இடர்பாடுகள் ஏற்படக்கூடும் என்றும் கொரோனா வைரஸ் போன்று வரும் மார்ச் மாதம் மீண்டும் ஒரு வைரஸ் விஷக் காய்ச்சல் பரவும் ஆபத்து உள்ளதாக பஞ்சாங்க ஆய்வாளர்கள் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளனர்.

பஞ்சாங்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ள நாட்களில் ஆலயங்களில் அனைத்து விழாக்களும் தவறாமல் நடைபெறுவதால் அதன்மூலம் தெய்வங்களின் அருளால் மக்கள் காப்பாற்றப்படுவார்கள் என பஞ்சாங்க கணிப்பாளர்கள் தெரிவிக்கின்றன. தற்போது நடைபெறும் சார்வரி தமிழ் வருடத்தில் உலகம் முழுவதும் கெடுபலன்கள் ஏற்பட்டு மக்கள் உயிரிழப்பது அதிகரிக்கும் என கடந்த ஆண்டு பஞ்சாங்கம் கணிப்பின் போது ஆகம வல்லுனர்கள் தெரிவித்து இருந்தனர். இந்நிலையில் 2021 ஆம் ஆண்டிலும் அதே கெடு பலன்கள் ஏற்படக்கூடும் என எச்சரித்து பஞ்சாங்க பலன் களை நம்பும் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Categories

Tech |