Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

நாளைய (12-10-2020) நாள் எப்படி இருக்கும்..? இதோ உங்கள் ராசிக்கு…!!

நாளைய  பஞ்சாங்கம்

12-10-2020, புரட்டாசி 26, திங்கட்கிழமை, தசமி திதி மாலை 04.39 வரை பின்பு தேய்பிறை ஏகாதசி.

ஆயில்யம் நட்சத்திரம் இரவு 12.29 வரை பின்பு மகம்.

சித்தயோகம் இரவு 12.29 வரை பின்பு மரணயோகம்.

நேத்திரம் – 1.

ஜீவன் – 1/2.

நவகிரக வழிபாடு நல்லது.

தனிய நாள்.

புதிய முயற்சிகளை தவிர்க்கவும்.

 

இராகு காலம்-  காலை 07.30 -09.00,

 எம கண்டம்- 10.30 – 12.00,

 குளிகன்- மதியம் 01.30-03.00,

 சுப ஹோரைகள்- மதியம்12.00-01.00, மதியம்3.00-4.00, மாலை06.00 -08.00,  இரவு 10.00-11.00.

 

நாளைய ராசிப்பலன் –  12.10.2020

மேஷம்

உங்களின் ராசிக்கு வீட்டில் மருத்துவ செலவு உண்டாகும். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவி கிடைக்க தாமதம் அடையும். விட்டுக்கொடுத்து சென்றால் வீண் பிரச்சனைகள் தவிர்க்கும். நண்பர்களின் ஆலோசனையால் வியாபாரத்தில் இருந்த மந்த நிலை அகன்று முன்னேற்றம் உண்டாகும்.

ரிஷபம்

உங்களின் ராசிக்கு அதிகாலையில் மகிழ்ச்சியான செய்தி வீட்டுக்கு வரும். உடன்பிறந்தவர்களின் ஆதரவு கிடைக்கும்.உத்தியோகத்தில் கொடுக்கல் வாங்கல் சரளமான நிலையில் இருக்கும். ஆடைகள் ஆபரணங்கள் வாங்குவதில் ஆர்வம் கூடும்.

மிதுனம்

உங்களின் ராசிக்கு வீட்டில் பொருளாதாரரீதியில் நெருக்கடி இருக்கும். உடலில் சிறு சிறு ஆரோக்கிய பாதிப்பு உண்டாகும். உத்தியோக ரீதியில் எதையும் சிந்தித்து செயல்பட்டால் லாபமடைவீர்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவி தடை இல்லாமல் இருக்கும்.

கடகம்

உங்களின் ராசிக்கு எந்த செயல் செய்தாலும் புது உற்சாகத்துடனும் பொலிவுடனும் செய்வீர்கள். வீட்டில் மகிழ்ச்சியான நிகழ்ச்சி நடக்கும்.தொழில் தேடுபவர்களுக்கு நல்ல வேலை வாய்ப்பு கிடைக்கும். உத்தியோகத்தில் எடுக்கும் முயற்சிகள் வெற்றியை கொடுக்கும். பழைய பாக்கிகள் அனைத்தும் வசூலாகும். தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும்.

சிம்மம்

உங்களின் ராசிக்கு பொருளாதார நிலையில் நெருக்கடிகள் உண்டாகும். வீட்டில் இருப்பவர்களிடம் சிறு மனஸ்தாபம் உருவாகும்.தொழிலில் எந்த முயற்சி எடுத்தாலும் சற்று சிந்தித்து எடுங்கள் அதுவே நல்லது.உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணிச்சுமை குறைய வாய்ப்பு அதிகரிக்கும்.

கன்னி

உங்களின் ராசிக்கு எந்த காரியம் செய்தாலும் மன தைரியத்தோடு செய்து முடிப்பீர்கள். உத்தியோக ரீதியில் புதிய கருவிகள் வாங்கும் முயற்சி அனுகூலத்தை கொடுக்கும். வீட்டில் அனைவரும் வெளியூர் பயணம் செல்லக் கூடும். பெரியவர்களின் அறிமுகம் அனுகூலத்தை கொடுக்கும். வருமானம் இரட்டிப்பாகும்.

துலாம்

உங்களின் ராசிக்கு வீட்டில் சுப செலவு உண்டாகும். உற்றார் உறவினர் மூலம் நல்ல செய்தி வீடு தேடி வரும். ஆடம்பர பொருட்களை வாங்குவதில் ஆர்வம் உண்டாகும். தெய்வ வழிபாட்டில் ஈடுபாடு இருக்கும். நண்பர்களின் உதவியால் இருந்த பிரச்சனை அனைத்தும் விலகும். உத்தியோகத்தில் புதிய மாற்றம் உண்டாகும்.

விருச்சிகம்

உங்களின் ராசிக்கு வீட்டில் ஒற்றுமை இல்லாமல் இருக்கும். சுபகாரிய பேச்சு வார்த்தை நலமாக முடிய சுமூகமான பேச்சை கடைபிடிக்க வேண்டும். உத்தியோகத்தில் எதிர்பாராத இடமாற்றம் மனக்குழப்பத்தை கொடுக்கும். புதிய வாகனம் வாங்கும் யோகம் கைகூடும். பழைய பாக்கி அனைத்தும் வசூலாகும்.

தனுசு

உங்களின் ராசிக்கு மன உளைச்சலால் தேவையில்லாத டென்ஷன் உண்டாகும். சந்திராஷ்டமம் உங்கள் ராசியில் இருப்பதால் எந்த காரியம் செய்தாலும் இழுபறி நிலை உண்டாகும். சுபகாரியங்கள் தள்ளி வைப்பது நல்லது.உத்யோகத்தில் மேலதிகாரிகள் இடம் வீண் வாக்குவாதங்களை தவிர்த்து விடுங்கள் அதுவே நல்லது.

மகரம்

உங்களின் ராசிக்கு பணவரவு இருக்கும். தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். வீட்டில் மகிழ்ச்சி உண்டாகும். தொழிலில் எடுக்கும் முயற்சியில் அனுகூலம் கிடைக்கும். தொழிலில் உடன் இருப்பவர்களால் அனுகூலம், லாபம் உண்டாகும். வெளியிடங்களில் கொடுத்த கடன் அனைத்தும் வசூலாக கூடும். சுபகாரியம் கைகூடி வரும்.

கும்பம்

உங்களின் ராசிக்கு உற்றார் உறவினர்கள் மூலம் அனுகூலம் உண்டாகும். சுபகாரிய பேச்சு வார்த்தை  சுமுகமான  பலனை கொடுக்கும். வங்கிக் கடன் கிடைக்கும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளால் அனுகூல பலன் கிட்டும். புதிய தொழில் தொடங்கும் முயற்சி வெற்றியை கொடுக்கும்.

மீனம்

உங்களின் ராசிக்கு வேலையில் தேவையில்லாத பிரச்சனை வரும். உடல் ஆரோக்கியத்தில் அசதி வரும். தொழிலில் இதுவரை இருந்த மந்த நிலை நீங்கி புது பொலிவு பெருகும். பொருளாதார பிரச்சனைகள் நீங்கும். சிறிது கவனத்துடன் இருங்கள் அதுவே நல்லது.

Categories

Tech |