நெல்லை மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் குடிநீர் பற்றாக்குறை காரணமாக அப்பகுதி மக்கள் 100க்கும் மேற்பட்டோர் போராட்டம் நடத்தினர்.
நெல்லை மாவட்டத்தில் பாப்பாக்குடி அருகே இருக்கின்ற இடைகால் ஊராட்சிக்கு உட்பட்ட பனையங்குறிச்சி என்ற கிராமத்தில் 500 குடும்பங்கள் வசித்து வருகின்றன. அந்த கிராமத்தில் குடிநீர் தட்டுப்பாடு அதிகமாக இருக்கிறது. அந்த கிராமத்தில் வழியாக வாசுதேவநல்லூர் செல்லக்கூடிய கூட்டு குடிநீர் திட்ட குழாயில் சில நாட்களுக்கு முன்னர் உடைப்பு ஏற்பட்டுள்ளது. அதிலிருந்து வரக்கூடிய தண்ணீரை அப்பகுதி மக்கள் அனைவரும் குடிநீராக பயன்படுத்துகிறார்கள். இந்நிலையில் நேற்று குடிநீர் குழாய் உடைப்பை சரி செய்வதற்கு ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் வந்துள்ளனர்.
அப்போது அந்த கிராமத்தை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட மக்கள் ஒன்று கூடி, எங்கள் கிராமத்திற்கு குடிநீர் பிரச்சனையை சரி செய்ய வேண்டும் என்று போராட்டம் நடத்தினர். மேலும் அப்பகுதியில் ஒரு குடிநீர் இணைப்பு வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இதுபற்றி அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பாப்பாகுடி காவல்துறையினர், பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.நீண்ட நேர பேச்சுவார்த்தைக்கு பின்னர் மக்கள் அந்த இடத்திலிருந்து கலைந்து சென்றனர்.அந்தப் போராட்டத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.