Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

மொரு மொறு ஓட்ஸ் தோசை…அஞ்சே நிமிசத்தில் ரெடி…!!

ஓட்ஸ் தோசை செய்ய தேவையான பொருட்கள்: 

ஓட்ஸ்                            – 200 கிராம்
வெங்காயம்              – ஒரு கப் நறுக்கியது
பச்சை மிளகாய்     – 2 நறுக்கிய
இஞ்சி                            – சிறிய துண்டு நறுக்கியது
கடுகு, சீரகம்             – தலா ஒரு டீஸ்பூன்
எண்ணெய், உப்பு   – தேவையான அளவு

செய்முறை:

ஒரு பாத்திரத்தை எடுத்து, அதில் ஓட்ஸ் 200 கிராம், உப்பு மற்றும் தண்ணீர்(தேவையான அளவ) சேர்த்து தோசை மாவு பதத்திற்கு கரைக்கவும்.

கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும், கடுகு, சீரகம், வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி சேர்த்து நன்கு வதக்கி கொள்ளவும்.

வதக்கியதை தோசை மாவுடன் சேர்த்து கட்டியில்லாமல் கலக்கி வைக்கவும். பிறகு தோசைக்கல்லில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கலக்கிய மாவை ஊற்றி இருபுறமும் எண்ணெய் விட்டு சுட்டெடுக்கவும். இப்போது சுவையான ஓட்ஸ் தோசை ரெடி

Categories

Tech |