Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த…வெஜிடபிள் தோசை ரெசிபி…!!

வெஜிடபிள் தோசை செய்ய தேவையான பொருட்கள்:                                                                                                                                                                                                                                                                                                     இட்லி மாவு                     – 4 கப்                                                                                                                                                         கடலை மாவு                  –  ஒரு கப்
கேரட் துருவியது          – அரை கப்
பீட்ரூட் துருவல்             – அரை கப்
பெரிய வெங்காயம்   – 2 பொடியாக நறுக்கிய
பச்சை மிளகாய்           – 6
கருவேப்பிலை              –  சிறிதளவு
உப்பு                                   – ஒரு துளி
எண்ணெய்                      – தேவையான அளவு

செய்முறை:

ஒரு பாத்திரத்தை எடுத்து அதில் இட்லி மாவு 4 கப், கடலை மாவு 1 கப், உப்பு, சேர்த்து தோசை மாவு பதத்திற்கு கலக்கி கொள்ளுங்கள்.

கலக்கி வைத்திருக்கும் மாவில் துருவிய காரட் மற்றும் பீட்ரூட், பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சைமிளகாய், கருவேப்பிலை சேர்த்து நன்கு கலக்கி வைக்கவும்.

அடுப்பில் தோசை கல்லை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கலக்கிய மாவை ஊற்றி மேலாக தேய்க்கவும்.அதன்மேல் ஒன்று அல்லது இரண்டு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி மூடி வைக்கவும்.

ஒரு நிமிடம் கழித்து திருப்பி போட்டு எண்ணெய் ஊற்றி நன்கு பொன்னிறமாக வந்ததும் எடுக்கவும். இது பார்க்க அழகாகவும் சுவையாகவும் இருக்கும்.அதற்கு சட்னியே தேவை இல்லை அப்படியே சாப்பிடலாம். அவ்வளவு சுவையாக இருக்கும்.

Categories

Tech |