Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்…பச்சைப்பயறு தோசை ரெசிபி…!!

பச்சைபயறு தோசை செய்ய தேவையான பொருட்கள்

பச்சரிசி                          – 200 கிராம்                                                                                                                                பச்சைப்பயறு             -200 கிராம்
தேங்காய் துருவல்    – ஒரு டீஸ்பூன்
காய்ந்த மிளகாய்      – 2
பெருங்காயத்தூள்    – கால் டீஸ்பூன்
துருவிய இஞ்சி            – ஒரு டீஸ்பூன்
கறிவேப்பிலை            – 5-6
கொத்தமல்லி              – சிறிதளவு
எண்ணெய், உப்பு      – தேவையான அளவு

செய்முறை:

பச்சரிசி மற்றும் பச்சைப்பயறை ஒன்றாக சேர்த்து ஒரு மணி நேரம் ஊற வைக்கவும். ஊறிய அரிசி, பயறுடன், தேங்காய் துருவல், காய்ந்த மிளகாய், பெருங்காயத்தூள், இஞ்சி, கொத்தமல்லி, கறிவேப்பிலை, உப்பு சேர்த்து தோசை மாவு பதத்தில் அரைத்து கொள்ளவும்.

அடுப்பில் தோசைக்கல்லை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அரைத்து வைத்திருக்கும் மாவை ஊற்றி  சுட்டு எடுக்கவும். சுவையான பச்சை பயறு தோசை ரெசிபி ரெடி.

Categories

Tech |