ஆப்கானிஸ்தான் அரசின் வான்வேளி தாக்குதலால் 26 தலிபான் பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்
ஆப்கானிஸ்தானில் 19 வருடங்களாக அரசுக்கும் தலிபான் பயங்கரவாதிகளுக்கும் இடையே உள்நாட்டு போர் நிலவி வருகிறது. இதனை முடிவுக்கு கொண்டுவர இரண்டு தரப்பினர் இடையே பேச்சுவார்த்தையும் நடைபெற்று வருகின்றது. பேச்சுவார்த்தையில் எந்த முன்னேற்றமும் ஏற்படாத நிலையில் பயங்கரவாதிகள் தொடர்ந்து ராணுவ வீரர்கள் மற்றும் காவல்துறையினரை தாக்கி வருகின்றனர். அதேநேரம் ஆப்கானிஸ்தான் அரசும் தலிபான் பயங்கரவாதிகளை ஒடுக்குவதற்கான செயல்களை செய்து வருகின்றது.
அவ்வகையில் தலிபான் பயங்கரவாதிகளின் ஆதிக்கம் நிறைந்த எல்மெண்ட் மாகாணத்தில் ஆப்கானிஸ்தான் ராணுவம் அதிரடியாக வான்வெளி தாக்குதலை நிகழ்த்தியது. போர் விமானங்கள் மூலம் குண்டு மழை பொழியப்பட்டது. இதில் 26 தலிபான் பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதோடு பலர் படுகாயமடைந்தனர். அதுமட்டுமன்றி பயங்கரவாதிகளின் தலிபான் பயங்கரவாதிகளின் பதுங்கு அதோடு அவர்களின் பதுங்கு குழிகள் மற்றும் ஆயுதக் கிடங்குகள் போன்றவை முற்றிலுமாக சேதப்படுத்தப்பட்டன.