250 பேர் கூடி நடைபெற்ற திருமணம் சமூக வலைத்தளத்தில் வெகுவாக பேசப்பட்டு வருகின்றது
லண்டனில் இருக்கும் நகரில் உள்ள பூங்காவில் நடைபெற்ற திருமணம் சமூக வலைதளங்களில் அதிகமாக பேசப்பட்டு வருகின்றது. இந்தியாவை சேர்ந்த ரோமா மற்றும் வினால் பட்டேல் இந்த மாதம் 2ஆம் தேதி திருமணம் செய்து கொண்டனர். இவர்களது திருமண விழாவில் 250 பேர் பங்கேற்றனர். லண்டனில் கொரோனா பாதிப்பு தீவிரமடைந்து வருவதால் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இவர்களது திருமணம் சுகாதார முறையில் நடைபெற்றதாக பிரிட்டன் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
பூங்காவில் நடைபெற்ற திருமண விழாவிற்கு வந்த விருந்தினர்கள் அவர்களது சொந்த காரில் அமர்ந்து கொண்டு மிகப் பெரிய திரையில் ஒளிபரப்பான திருமணத்தை கண்டு ரசித்தனர். திருமணம் முடிந்த பிறகு தம்பதி கோல்ப் வாகனத்தில் அமர்ந்து கொண்டு பூங்காவை சுற்றி வந்து திருமணத்திற்கு வந்த விருந்தாளிகளுக்கு தங்கள் மகிழ்ச்சியை தெரிவித்தனர்.அதோடு தங்கள் வாகனத்தில் அமர்ந்திருந்த விருந்தினர்களுக்கு கிருமி நாசினியும் சிற்றுண்டி பொட்டலங்களும் கொடுக்கப்பட்டது.
இணையம் ஊடாக உணவில் பதிந்திருந்தால் உரிய காரின் அருகே பரிமாறுபவர் சென்று உணவை வினியோகிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. இதுகுறித்து புதுமண தம்பதி கூறுகையில், “தற்போதைய ஆபத்தான சூழலிலும் எங்கள் திருமணத்திற்கு அனைவரும் வருகை தந்தது மகிழ்ச்சியாக இருந்தது. இது மறக்க முடியாத இனிய நாள்” என்று தெரிவித்துள்ளனர்.