ஆப்கானிஸ்தானில் தலிபான் பயங்கரவாதிகள் போர் விமானங்கள் குண்டு மழை பொழிந்ததால் 26 பயங்கரவாதிகள் உயிரிழந்தனர்.
ஆப்கானிஸ்தானில் கிட்டத்தட்ட 19 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்துக் கொண்டிருக்கும் உள்நாட்டுப் போரை முடிவுக்கு கொண்டுவர அந்நாட்டு அரசு மற்றும் தலிபான் பயங்கரவாத அமைப்புக்கு இடையே அமைதிப் பேச்சுவார்த்தை தொடர்ந்து நடந்துகொண்டிருக்கிறது. ஆனால் அந்தப் பேச்சுவார்த்தையில் எத்தகைய முன்னேற்றமும் தற்போது வரை ஏற்படவில்லை. ஆப்கானிஸ்தானில் பயங்கரவாதத் தாக்குதல் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது. தலிபான் பயங்கரவாதிகள்,ராணுவ வீரர்கள் மற்றும் போலீசாரை குறிவைத்து தொடர் தாக்குதல் நடத்தி வருகிறார்கள்.
அதே சமயத்தில் அவர்களை அடக்கும் வகையில் ராணுவம் தங்களின் தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது.அவ்வகையில் தலிபான்களின் ஆதிக்கம் அதிகமுள்ள ஹெல்மெட் மாகாணத்தில் ராணுவம் அதிரடி தாக்குதல் நடத்தியது. தலிபான் பயங்கரவாதிகளின் நிலைகள் மீது போர் விமானங்கள் மூலமாக குண்டு மழை பொழிய செய்தது. அந்தத் தாக்குதலில் தலிபான் பயங்கரவாதிகள் 26 பேர் உயிரிழந்தனர். மேலும் சில பயங்கரவாதிகள் படுகாயமடைந்துள்ளனர். அதுமட்டுமல்லாமல் பயங்கரவாதிகளின் ஆயுத கிடங்குகள் மற்றும் பதுங்கு குழிகள் அனைத்தும் அளிக்கப்பட்டன.