திருமணம் செய்ய மறுத்த காதலியை காதலன் கத்தியால் குத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
சென்னை மாவட்டம் சோலையூர் சேர்ந்தவர் கோவிந்தன். இவர் தனது மனைவி செல்வி, மகன் மற்றும் மகளுடன் தனது சொந்த ஊரு தொட்டியம் கிராமத்திற்கு சென்றார். கோவிந்தனின் பத்தாம் வகுப்பு படிக்கும் மகள் சென்னையில் இருந்தபோது நாமக்கல்லை சேர்ந்த சதீஸ் என்பவரை காதலித்து வந்துள்ளார்.
இந்நிலையில் தொட்டியம் கிராமத்திற்கு தான் காதலித்த பெண்ணை தேடிச் சென்றுள்ளார் சதீஷ். அங்கு இருவர் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது கோபம் கொண்ட சதீஷ் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் திடீரென பெண்ணை சரமாரியாக குத்திவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றார்.
இதனை அவ்வழியாக வந்த சின்னசேலம் காவல் ஆய்வாளர் ராஜா பார்த்து அதிர்ச்சி அடைந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த பெண்ணை மருத்துவமனையில் அனுமதித்தார். பின்னர் காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில் திருமணம் செய்ய காதலி மறுப்பு தெரிவித்ததால் கோபம் கொண்ட காதலன் கத்தியால் குத்திவிட்டு தப்பி ஓடியது தெரிய வந்துள்ளது.