தோனியின் மகளுக்கு பாலியல் மிரட்டல் விடுத்த 16 வயது சிறுவன் குஜராத் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த செப்டம்பர் 19-ஆம் தேதி தொடங்கிய ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தொடர்ந்து மோசமான ஆட்டத்தை வெளிக்காட்டி வருகின்றது. முதல் போட்டியில் தோல்வியை தழுவிய சென்னை அணி தொடர்ச்சியாக மூன்று போட்டிகளிலும் தோல்வியை தழுவியது.பின்பு பஞ்சாப் அணிக்கு எதிராக ஒரு வெற்றியை பதிவு செய்த போதிலும் மீண்டும் கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் தோல்வியை தழுவியது.இந்த ஆட்டங்களில் பேட்ஸ் மேன்கள் மோசமாக ஆட்டத்தை வெளிப்படுத்தியதாக தெரிகின்றது.
மேலும் இவ்வாட்டங்களில் தோனியும் மிக மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.இதையொட்டி சமூகவலைதளங்களில் விஷமிகள் சிலர் தோனி மற்றும் அவரது மகளின் இன்ஸ்டாகிராம் பக்கங்களில் மிரட்டல் விடுத்தனர்.மேலும் தோனி ஒழுங்காக விளையாடவில்லை என்றால் தோனியின் 5 வயது மகளை பாலியல் வன்கொடுமை செய்துவிடுவோம் என மிகவும் அருவருக்கத்தக்க வகையில் பதிவிட்டனர்.
இதையடுத்து தோனி கொடுத்த புகாரின் பெயரில் ஜார்க்கண்ட் ராஞ்சி போலீசார் விசாரணையை துவக்கினர்.அதில் குஜராத் மாநிலம் கட்ச் பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளான்.மேலும் அச்சிறுவன் நான் தான் ஆபாச மிரட்டல் விடுத்தேன் என போலீசாரிடம் ஒப்புக் கொண்டுள்ளான். 16 வயது சிறுவன் பாலியல் மிரட்டல் விடுத்த சம்பவம் குஜராத் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.