நடிகை குஷ்பு இன்று பாஜகவில் இணைய உள்ளார் என்று வெளியான தகவலை அடுத்து அவர் காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.
காங்கிரஸ் தலைமையிடம் குஷ்புவை சில நாட்களாக ஒதுக்கி வருகின்றது என்று கிசுகிசுக்கப்பட்டு வந்தது. இதனையொட்டி நடிகை குஷ்புவும் தனது மன வருத்தத்தை தெரிவித்து இருந்தார். நடிகை குஷ்புவின் பிறந்தநாளுக்கு பாஜக தலைவர்கள் வாழ்த்துக்கள் தெரிவித்ததையடுத்து குஷ்பு பாஜகவில் இணைய இருப்பதாக தகவல்கள் வெளியாகின.இந்நிலையில் நடிகை குஷ்பு நான் பாஜகவில் இணைய வில்லை என திட்டவட்டமாக தெரிவித்திருந்தார்.மேலும் ஒரு டீவீட்டுக்கு 2 ரூபாய் வாங்கிக்கொண்டு என்னைப்பற்றி ட்வீட் போடுகின்றனர் என குற்றம் சாட்டியிருந்தார்.
இந்நிலையில் நடிகை குஷ்பு ஜே.பி நட்டா தலைமையில் பாஜகவில் இணைய விருப்பதாக இன்று தகவல்கள் வெளியாகியுள்ளன.மேலும் ஜேபி நட்டா வினை சந்திப்பதற்காக குஷ்பு டெல்லி சென்றுள்ளதாக தகவல்கள் வந்துள்ளன. இத்தகவலை அடுத்து காங்கிரஸ் மேலிடம் நடிகை குஷ்புவினை செய்தி தொடர்பாளர் பதவியில் இருந்து அதிரடியாக நீக்கம் செய்துள்ளது. இதனை அடுத்து குஷ்பு பாஜகவில் இணையவிருப்பது உறுதியாகி உள்ளதாக தெரிகின்றது.