காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் பொறுப்பில் இருந்து நடிகை குஷ்பூ நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய செய்தித் தொடர்பாளர் பொறுப்பிலிருந்து நடிகை குஷ்பு அவர்கள் நீக்கப் பட்டு இருக்கிறார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை தற்போது காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைமை தெளிவுபடுத்துகிறது. ஏனென்றால் அவர் பாரதிய ஜனதா கட்சியில் இணையலாம் என்று தொடர்ச்சியாக தகவல்கள் பரவியது. கடந்த வாரம்கூட டெல்லிக்கு வந்து காங்கிரஸ் கட்சியின் தலைமையுடன் ஒரு சமரச சூழலில் ஈடுபடுவதற்கான பேச்சுவார்த்தை நடத்த முற்பட்டார். ஆனால் கடைசிவரை சோனியா காந்தி மற்றும் பொதுச் செயலாளர் இருக்கக்கூடிய கேசி வேணுகோபால் ஆகியோரை சந்திப்பதற்கு நேரம் ஒதுக்கப்படவில்லை.
இதையடுத்து மீண்டும் சென்னை திரும்பினார். இந்த நிலையில்தான் இன்றைய தினம் மதியம் 12 மணியளவில் அவர் பாஜக கட்சியின் தேசிய தலைவராக இருக்கக் கூடிய ஜேபி நட்டா முன்னிலையில் குஷ்பு உள்ளிட்ட முக்கிய பிரபலங்கள் பாரதிய ஜனதா கட்சியில் இணைய இருக்கின்றனர். இந்த சூழலில்தான் காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைமை அதிகாரப்பூர்வமாக கட்சியின் முக்கிய பொறுப்பில் இருந்து தற்போது குஷ்பூ நீக்கப்பட்டுள்ளார். இதனால் தற்போது அவர் பாரதிய ஜனதா கட்சியில் இணைவது உறுதியாகியுள்ளது.