Categories
அரசியல் சற்றுமுன்

காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகினார் குஷ்பு… சோனியாவிற்கு கடிதம்…!!!

காங்கிரஸின் செய்தி தொடர்பாளர் பதவியிலிருந்து குஷ்பு  நீக்கப்பட்டதையடுத்து காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து விலகுவதாக சோனியா காந்திக்கு கடிதம் எழுதியுள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளராக இருந்து வருபவர் நடிகை குஷ்பு .இவர் சில நாட்களாகவே காங்கிரஸில் இருந்து விலகி இருக்கிறார் என்று கிசுகிசுக்கப்பட்டு வந்தது.இதை சில நாட்களுக்கு முன் திட்டவட்டமாக மறுத்தார் நடிகை குஷ்பு.இந்நிலையில் அவர் இன்று ஜே.பி நட்டா தலைமையில் பாஜகவில் இணையவிருப்பதாகவும் அதற்காகவே டெல்லி சென்றுள்ளதாகவும்  தகவல் வந்தது.

இந்த தகவலையடுத்து காங்கிரஸ் தலைமையிடம் குஷ்புவை தேசிய செய்தி தொடர்பாளர் பதவியில் இருந்து நீக்குவதாக தெரிவித்திருந்தது. இந்த செய்தி வந்த சில நிமிடங்களில் குஷ்பு தான் காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து விலகுவதாக சோனியாகாந்திக்கு  கடிதம் எழுதியுள்ளார். மேலும் தனக்கு வாய்ப்பு அளித்ததற்கு நன்றி எனவும்,உங்கள் மீதான மதிப்பு எப்போதும் அப்படியே இருக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.மேலும் மக்களால் அங்கீகரிக்கப்படாத தலைவர்கள் என்னை அடக்கி வைத்தனர் என்றும், நான் பணம் புகழுக்காக காங்கிரஸில் இணையவில்லை என்றும் கடிதத்தில் எழுதியுள்ளார்.

Categories

Tech |