Categories
தேசிய செய்திகள்

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்ப்பு – ராகினி, சஞ்சனாவிடம் விசாரிக்க முடிவு…!!

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளதால் நடிகைகள் ராகினி, சஞ்சனாவிடம்  வருமானவரித் துறையினர் விசாரணை நடத்த முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

கன்னட திரையுலகில் போதைப்பொருள் பயன்படுத்திய  விவகாரம் குறித்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் நடிகைகள் ராகினி, சஞ்சனா கல்ராணி உட்பட 15 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்கள் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். நடிகைகள் இரண்டு பேரும் போதைப் பொருட்கள் பயன் படுத்தியதுடன் விற்பனையாளர்கள் பலருடன் தொடர்பில் இருந்ததும் தெரியவந்துள்ளது.

நடிகைகள் ராகினியும், சஞ்சனாவும் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். நடிகை சஞ்சனா குறைவான படங்களில் நடித்ததுடன் குறைந்த அளவே சம்பளம் வாங்கி வந்திருந்தார். ஆனால் தற்போது அவருக்கு பல கோடி ரூபாய் சொத்து இருப்பதாக கூறப்படுகிறது. அதுபோல நடிகை ராகினியும் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்து இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இதனால் நடிகைகள் இரண்டு பேரும் முறையாக வரி செலுத்தி உள்ளார்களா? அவர்களிடமிருக்கும் சொத்துக்களின் விவரங்களை வருமான வரித்துறையிடம் சரியாக சமர்ப்பித்துள்ளனரா? உள்ளிட்டவை குறித்து விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Categories

Tech |