Categories
தேசிய செய்திகள்

தலைமை நீதிபதி எஸ்.ஏ. பாப்டேவுக்கு ஜெகன் மோகன் பரபரப்புக் கடிதம்…!!

ஆந்திரா நீதிமன்றங்களின் செயல்பாடுகளில் தெலுங்கு தேசம் கட்சிக்கு ஆதரவாக உச்ச நீதிமன்ற நீதிபதி என்.வி. ரமணா தலையிடுகிறார் என்று அம்மாநில முதல்வர் ஜெகன்மோகன்  குற்றம்சாட்டியுள்ளார்.

உச்சநீதிமன்றத்தின் மூத்த நீதிபதியாக இருப்பவர் என்.வி. ரமணா தற்போது உள்ள தலைமை நீதிபதி எஸ்.ஏ. பாக்டேவிற்கு பிறகு இவர்தான் தலைமை நீதிபதியாக பதவி ஏற்க உள்ளார். இந்நிலையில் நீதிபதி என்.வி. ரமணா மீது  பரபரப்பான குற்றச்சாட்டுகளை கூறி உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ. பாக்டேவிற்கு  ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி கடிதம் எழுதியுள்ளார்.

அதில் உச்ச நீதிமன்றம் மூத்த நீதிபதியான என்.வி. ரமணா தெலுங்கு தேசம் கட்சித் தலைவரும், முன்னாள் முதல்வருமான சந்திரபாபு நாயுடுவிற்கு நெருக்கமாக உள்ளார் என்றும் சந்திரபாபு நாயுடு ஆட்சியில் அழைக்கப்பட்ட அனைத்து ஒப்பந்தங்களிலும் முறைகேடுகள் நடந்து இருப்பதால் அவற்றைப் பற்றி விசாரிக்க உத்தரவிடப்பட்ட விவகாரத்தில் நீதிபதி என்.வி. ரமணா தலையிட்டு தனது செல்வாக்கை பயன்படுத்தி விசாரணையை தடுக்கிறார் என குற்றம்சாட்டி உள்ளார். அதனால் நீதிபதி என்.வி. ரமணா  மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கடிதத்தில் அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |