கொரோனா வைரஸ் ரூபாய் நோட்டுகள்,செல்போன்கள் மற்றும் எவர்சில்வர் போன்ற பரப்புகளில் ஒரு மாதம் வரை உயிர்வாழும் என ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் தொடர்பான ஆய்வுகளில் பல்வேறு அதிர்ச்சி தரும் தகவல்கள் தொடர்ந்து வெளியாகிக் கொண்டிருக்கின்றன. கொரோனா வைரஸ் எந்தெந்த பரப்புகளில் எத்தனை நாட்கள் வரை உயிர்வாழும் என்பது பற்றி பல்வேறு நாட்டு விஞ்ஞானிகள் அனைவரும் தொடர்ந்து ஆய்வு நடத்தி வருகின்றனர். அவ்வாறு ஆஸ்திரேலியாவை சேர்ந்த சிஎஸ்ஐஆர்ஓ என்ற அறிவியல் ஆராய்ச்சி நிறுவனம் ஒன்று சில நாட்களுக்கு முன் ஆய்வு ஒன்றை நடத்தியது.அந்த ஆய்வு முடிவில் ரூபாய் நோட்டுகள் 28 நாட்கள் வரை கொரோனா வைரஸ் உயிர் வாழும் என்பது தெரியவந்துள்ளது.
அதுமட்டுமன்றி செல்போன் ஸ்கிரீன்கள் மற்றும் எவர்சில்வர் பொருள்களில் 28 நாட்கள் வரை கொரோனா வைரஸ் உயிருடன் இருக்கும் என்று ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். மேலும் இந்த கொடிய வைரஸ் மிகக் குறைந்த வெப்பநிலையில் அதிக நாட்கள் உயிர் வாழும் தன்மையை பெற்றுள்ளது எனவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இது காட்டன் போன்ற துணிகளில் உயிர் வாழும் காலத்தை விட, கண்ணாடி மற்றும் எவர்சில்வர் உள்ளிட்ட பல பல தரப்புகளில் அதிக காலம் உயிர் வாழும் தன்மையுடையது. அதிலும் குறிப்பாக 20 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் வைரஸ் 28 நாட்கள் வரை உயிர்வாழும் என கண்டறியப்பட்டுள்ளது.இந்த ஆய்வு முடிவுகள் நோய் பரவலை தடுக்க வும் மற்றும் ஆபத்தை குறைக்கவும் நடைமுறைகளை மேம்படுத்த உதவும் என ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.