இன்று முதல் உச்ச நீதிமன்றம் முழுமையாக இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா பரவலை தொடர்ந்து கடந்த மாதம் உச்சநீதிமன்றம் மார்ச் 23 ஆம் தேதி முதல் காணொலிக் காட்சி மூலம் வழக்குகளை விசாரித்து வருகிறது. எனினும் மொத்தம் உள்ள 12 அமர்வுகளில் 5 அமர்வுகள் மட்டுமே இயங்கி வந்தன. இரண்டு அல்லது மூன்று நீதிபதிகளை கொண்ட இந்த அமர்வுகளால் சுமார் 20 வழக்குகள் மட்டுமே தினந்தோறும் விசாரிக்கப்பட்டு வந்தன. ஆனால் இன்று முதல் உச்ச நீதிமன்றம் முழுமையாக இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி 30 நீதிபதிகளும் 12 அமர்வுகள் மூலம் வழக்குகளை விசாரிப்பார்கள். இதில் இரண்டு அல்லது மூன்று நீதிபதிகளை கொண்ட 10 அமர்வுகள் ஒற்றை நீதிபதி கொண்ட 2 அமைப்புகளும் வழக்குகளை விசாரிக்கின்றனர். அதேநேரம் இந்த அமர்வுகள் அனைத்தும் காணொளி காட்சி மூலமே வழக்குகளை விசாரிக்கும்.