கருங்கல் அருகே உள்ள பகுதியில் பள்ளி ஆசிரியர் ஒருவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கருங்கல் அருகே உள்ள கண்ணன்விளை உள்ள மேலத்தெருவில் டைட்டஸ் என்பவர் தனது மனைவி அனித் என்பவருடன் வசித்து வருகிறார். அவர்களுக்கு 2 வயதில் ஒரு குழந்தை இருக்கிறது. டைட்டஸ் தற்போது வெளிநாட்டில் வேலை செய்து கொண்டிருக்கிறார். அவரின் மனைவி கருங்கல் அருகே இருக்கின்ற ஒரு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். கணவர் வெளிநாட்டில் இருப்பதால் அவர் தனது குழந்தையுடன் சூசை புறம் என்ற பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில் அனித் வசித்து வரும் வீட்டின் உரிமையாளர் வாடகை பணம் வசூல் செய்வதற்காக அவர் வீட்டுக்குச் சென்றுள்ளார். அப்போது கதவு உட்புறமாக பூட்டப்பட்டு இருந்ததால், வீட்டின் உரிமையாளர் வெளியே நின்று சத்தம் இட்டுள்ளார்.
ஆனால் கதவு திறக்கப்படாததால், சந்தேகம் அடைந்த அவர் ஜன்னல் வழியாக பார்த்துள்ளார். அப்போது அனித் கட்டிலில் அசைவற்று கடந்தார். அவரின் குழந்தை அருகில் அமர்ந்து அழுது கொண்டிருந்தது. இதுபற்றி உறவினர்கள் மற்றும் போலீசாருக்கு அவர் தகவல் அளித்துள்ளார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது அணித் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதை அறிந்தனர்.அதன் பிறகு உடலை கைப்பற்றிய போலீசார் உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் பற்றி வழக்குப்பதிவு செய்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.