Categories
மாநில செய்திகள்

கல்வியை காவிமயமாக்க… துணைவேந்தர் சூரப்பாவுக்கு… அண்ணா பல்கலைக்கழகம் தான் கிடைத்ததா?… ஸ்டாலின் கேள்வி…!!!

அண்ணா பல்கலைக்கழகத்திற்கு நிதி தேவை இல்லை என்று கூறுவதற்கு துணைவேந்தர் சூரப்பா என்ன மாநில முதல்வரா என்ற திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா தெரிவித்துள்ள கருத்துக்கு எதிராக திமுக தலைவர் மு.க ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், “அண்ணா பல்கலைக்கழகத்திற்கு மாநில அரசின் நிதி உதவி தேவை இல்லை என்று கடிதம் எழுதுவதற்கு துணைவேந்தர் சூரப்பா என்ன மாநில முதல்வராக?.ஒரு துணை வேந்தர் எப்படி தன்னிச்சையாக மத்திய அரசுக்கு கடிதம் எழுத முடியும்.

கல்வியை காவிமயமாக்குவதற்கு அண்ணா பல்கலைக்கழகம் தான் சூரப்பாவுக்கு கிடைத்ததா?. அண்ணா பல்கலைக்கழகத்தை பிரிக்கக் கூடிய சட்ட முன்வடிவை ஆளுநர் கட்டாயம் நிராகரிக்க வேண்டும்”என்று அவர் கூறியுள்ளார்.

 

Categories

Tech |