Categories
தேசிய செய்திகள்

“1 மணிநேரம் 33 வகையான உணவு” 10 வயது சிறுமியின் சாதனை…!!

10 வயது சிறுமி 33 வகையான உணவுகளை ஒரு மணி நேரத்தில் சமைத்து சாதனை படைத்துள்ளார்

சமையல் ஒரு கலை. அதனை வேலையாக நினைக்காமல் ரசித்து செய்பவர்கள் தான் அதிகம். சிலர் மிகுந்த ஆர்வத்துடன் சமையலில் ஈடுபடுவர். அப்படி கேரளாவை சேர்ந்த 10 வயது சிறுமி சமையல் மீது கொண்ட பற்றுதலால் சாதனை படைத்துள்ளார். சுமார் ஒரு மணி நேரத்தில் 33 வகையான உணவு வகைகளை ருசியாக சமைத்து சிறுமி சாதனை புரிந்துள்ளார்.

எர்ணாகுளத்தை சேர்ந்த விமானப்படை கமாண்டர் பிரஜித் பாபு என்பவரது மகள் சன்வி பிரஜித் தான் இந்த சாதனையை நிகழ்த்தி காட்டியுள்ளார். பிரைட் ரைஸ், இட்லி, பன்னீர் டிக்கா, ஊத்தப்பம், சிக்கன் ரோஸ்ட் உள்ளிட்ட 33 வகையான உணவுகளை ஒரு மணி நேரத்தில் சுவையாக சமைத்து ஆசிய சாதனை புத்தகத்தில் தனது பெயரை இடம்பெறச் செய்துள்ளார் சிறுமி சன்வி.

கடந்த ஆகஸ்ட் மாதம் 29 ஆம் தேதி அவர் இந்த சாதனையை நிகழ்த்தி இருந்தாலும் அது பற்றிய தகவல் தற்போது தான் வெளிவந்துள்ளது. 10 வயதான இந்த சிறுமி சமையல் கலையை யூ டியூப் மூலமாக பலருக்கும் கற்றுக் கொடுக்கிறார். சிறுமி கூறுகையில் “தாயின் சமையல் கலையால் ஈர்க்கப்பட்டதால் தான் இந்த சாதனையை செய்ய முடிந்தது” என தெரிவித்துள்ளார். மேலும் தனது சாதனையை தனது குடும்பத்திற்கும் நண்பர்களுக்கும் அர்ப்பணம் செய்வதாக தெரிவித்துள்ளார்.

Categories

Tech |