தொற்றினால் பாதிக்கப்பட்டு தேர்வு எழுத முடியாத மாணவர்கள் மீண்டும் தேர்வு எழுதுவதற்கு வாய்ப்பு அளிக்க உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது
கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு செப்டம்பர் மாதம் நடைபெற்ற நீட் தேர்வை எழுத முடியாமல் போன மாணவர்கள் அக்டோபர் மாதம் 14ஆம் தேதி தேர்வு எழுதுவதற்கான ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என்று தேசிய தேர்வு முகமைக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
தடைசெய்யப்பட்ட பகுதியில் இருந்ததால் தேர்வு எழுத முடியாமல் போன மாணவர்களும் அதே நாளில் தேர்வு எழுதலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வின் முடிவுகள் அக்டோபர் 16ஆம் தேதி அதிகாரபூர்வ தளத்தில் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.