Categories
அழகுக்குறிப்பு லைப் ஸ்டைல்

அழகை கெடுக்கும் பருக்கள்…தடுப்பதற்கான வழி என்ன?

பருக்கள் எதனால் வருகிறது, வராமல் தடுப்பதற்கான சில வழிகளை என்னவென்பதை இந்த செய்தி தொகுப்பில் காணலாம்:

ஆண்கள்,பெண்கள் இருவருக்கும் முகத்தில் உள்ள சுரப்பிகளில் அடைப்பு, பாக்டீரியா தொற்று, ஹார்மோன் மாற்றங்கள், சில வகை மாத்திரைகள், ஒவ்வாமை, அழகு சாதனங்கள் போன்ற காரணங்களால் முகத்தில் பருக்கள் ஏற்படலாம். அதைத் தொடுவதோ, கிள்ளுவதோ கூடாது. அதுவே மாறாத தழும்பாகிவிடும்.

சிலருக்கு முழங்கை, இடுப்புப் பகுதியில் பருக்கள் போலவும், தோலில் முட்களும் தோன்றலாம். அதற்கு பாலிக்யூலர் ஹைபர்கெரட்டோஸிஸ் என்று பெயர். வைட்டமின் ஏ, டி அத்தியாவசியக் கொழுப்பு அமிலம் ஆகியவற்றின் குறைபாட்டால் இது ஏற்படுகிறது.

அழகுப் பொருட்களை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். அதற்கு, தினமும் ஐந்து முறை  அவரவர் சருமதிற்கு ஏற்ற சோப்பினால் முகத்தை கழுவ வேண்டும்.

ஜாதிப்பூ மொட்டு, முல்லை மொட்டு இரண்டையும் சம அளவு எடுத்து பால் விட்டு நைஸாக அரைத்து பருக்களின் மீது பூசினால் பருக்கள் மறைந்து, நிறமும் கூடும்.

எலுமிச்சை சாறு, பாதாம் பருப்பு, தயிர் மூன்றையும் ஒன்றாகச் சேர்த்து அரைத்து முகத்தில் தடவி வந்தால் முகப்பருக்கள் மறையும்.

பருக்களால் முகத்தில் ஏற்படும் தழும்பை நீக்குவதற்கு நவீன சிகிச்சை முறைகள் உள்ளன. அனைத்து விதமான தோல் பிரச்னைகளுக்கும் அழகு கிரீம்களை கொண்டு மட்டுமே குணப்படுத்த முடியாது. தோலின் தன்மைக்குத் தகுந்தவாறு இயற்கை முறையைத் தேர்வு செய்வதன் மூலம் வாழ்நாள் முழுவதும் தொடரும் சங்கடங்களைத் தவிர்க்கலாம்.

Categories

Tech |