மீனம் ராசி அன்பர்களே..!
இன்று உங்களிடம் காணப்படும் தாழ்வு மனப்பான்மை காரணமாக சிறிது அவநம்பிக்கையோடு காணப்படுவீர்கள். இதனால் சற்று பின்தங்கி இருப்பீர்கள். உங்களுக்கு கொடுக்கப்பட்ட பணிகளை குறித்த நேரத்தில் முடிக்க முடியாது.
இதனால் மேலதிகாரிகளின் அதிருப்திக்கு ஆளாவீர்கள். இன்று உங்களின் சக பணியாளர்கள் குறித்த நேரத்தில் பணிகளை முடிப்பார்கள், இதனால் உங்களுக்கு கவலை ஏற்படும். உங்களின் இனிமையான பேச்சால் உங்களின் துணையை நீங்கள் மகிழ்விப்பீர்கள். இது நல்ல புரிந்துணர்வை ஏற்படுத்த உதவும். அதிகப்படியான செலவினங்கள் காணப்படும். இதனால் சேமிப்பு கரைந்துபோகும். இன்று மிகுந்த ஆற்றலுடன் காணப்படுவீர்கள். ஆரோக்கியம் நல்ல முறையில் இருக்கும். மாணவ மாணவியர்களுக்கு இன்று கல்வியில் ஆர்வம் குறைந்தே காணப்படும். நீங்கள் மகாலட்சுமி வழிபாடு செய்வது நல்லது.
அதிர்ஷ்டமான திசை: தென்கிழக்கு.
அதிர்ஷ்டமான எண்: 8.
அதிர்ஷ்டமான நிறம்: ரோஸ் நிறம்.