Categories
உலக செய்திகள் கொரோனா

செல்போனில் 28 நாட்களுக்கு சொகுசாக தங்கும் கொரோனா… ஆய்வில் அதிர்ச்சி தகவல்…!!!

செல்போனின் தொடுதிரையில் படரும் கொரோனா வைரஸ் 28 நாட்கள் வரை நீடித்திருக்கும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

கொரோனா நோய்த்தொற்று உலகில் பரவ ஆரம்பித்த காலத்திலிருந்தே அந்நூலைப் பற்றிய பல்வேறு விதமான ஆராய்ச்சிகளை ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.மேலும் நோய்க்கான தடுப்பு மருந்துகள் கண்டுபிடிப்பதிலும், புதுப்புது சிகிச்சை முறைகளை கண்டறிவதிலும் விஞ்ஞானிகள் முழுநேர ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளனர்.

இதையொட்டி ஆஸ்திரேலிய நாட்டு ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆராய்ச்சியில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளன.அதன்படி  செல்போனின் தொடுதிரையில் படரும் கொரோனா வைரஸ் 4 வாரங்கள் வரை நீடித்து இருக்கும் என கூறுகின்றனர். மேலும் இந்த வைரஸ் பரவிய செல்போனை உபயோகப்படுத்துபவர்களுக்கு  நோய் பரவும் வாய்ப்பும் அதிகம் எனவும் கூறுகின்றனர்.மேலும் ஏடிஎம்களில் எடுக்கப்படும் பணம், வங்கியில் இருந்து பெறப்படும் பணம், கண்ணாடி போன்ற பொருட்களில் இருக்கும் வைரஸ் 28 நாட்களுக்கு நீடித்திருக்கும் என எச்சரிக்கின்றனர்.

Categories

Tech |