குஷ்பு காங்கிரஸில் இருந்து விலகி பாஜகவில் இணைவதற்கு அவரது கணவர் சுந்தர் சி தான் காரணம் என்று கோபண்ணா கூறியுள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து விலகுவதாக குஷ்பு, சோனியா காந்திக்கு கடிதம் எழுதி இருக்கிறார். காங்கிரசிலிருந்து விலகிய அவர் இன்று டெல்லி சென்றுள்ளார். அவர் அங்கு பாஜகவில் இணைவது உறுதியாகியுள்ளது.
இதுகுறித்து தமிழக காங்கிரஸ் கட்சியின் ஊடகப் பொறுப்பாளர் கோபண்ணா கூறுகையில், “குஷ்பு காங்கிரசில் இருந்து விலகி பாஜகவில் சேர்வதற்கு அவரின் கணவர் சுந்தர் சி தான் காரணம்”என்று அவர் கூறியுள்ளார்.