Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் கோடி கோடியாய் கொட்ட போகும் பணம் …முதல்வர் அசத்தல்…!!!

தமிழகத்தில் 10,000 கோடி ரூபாய் முதலீட்டில் தொழில் தொடங்க உள்ள 14 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் முதலமைச்சர் பழனிசாமி இன்று கையெழுத்திட்டார்.

தமிழகத்தில் தொழில் தொடங்க வருமாறு பல்வேறு தொழில் நிறுவனங்களுக்கு முதலமைச்சர் பழனிசாமி ஏற்கனவே வேண்டுகோள் விடுத்திருந்தார்.இந்நிலையில் பிரிட்டானியா பிஸ்கட் கம்பெனி லிமிடெட்,அப்பல்லோ டயர்ஸ்,ஐநாக்ஸ் லிக்விட்ஆக்சிஜன்  போன்ற 14 நிறுவனங்கள் புதிதாக தமிழகத்தில் நிறுவனங்களை தொடங்க முன்வந்துள்ளன.

இதில் பிரிட்டானியா பிஸ்கட் கம்பெனியானது ஆனது நெல்லை மாவட்டதிலுள்ள கங்கை கொண்டானிலும், ஆக்சிஜன் சிலிண்டர் நிறுவனமானது ஓசூரிலும் அமையவிருக்கிறது.மேலும் மற்ற நிறுவனங்கள் சென்னை அருகிலுள்ள ஓரகடம், திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் அமைய உள்ளன.இந்நிறுவனங்கள் மூலம் 7,000 பேருக்கு மேல்  வேலைவாய்ப்பு கிடைக்க வாய்ப்புள்ளதாக தெரிகின்றது.பத்தாயிரம் கோடி ரூபாய்க்கு மேல் முதலீடு செய்யவிருக்கும் இந்த நிறுவனங்களுடன் இன்று காலை புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.

Categories

Tech |