இந்த வருடத்திற்கான பொருளாதார நோபல் பரிசு பெறுபவர்களின் பட்டியலில் இரண்டு பேர் இடம் பெற்றுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
உலகிலேயே மிக உயர்ந்த விருதாக கருதப்படும் நோபல் பரிசு நேற்று முதல் அறிவிக்கப்பட தொடங்கியுள்ளது. இந்த வருடத்திற்கான நோபல் பரிசு பட்டியலில் 211 தனிநபர்கள் மற்றும் 107 அமைப்புகள் என ஒட்டுமொத்தமாக 318 பேர் இடம் பெற்றுள்ளனர். இந்த நிலையில் இவ்வருடத்தின் இயற்பியல் துறையில் பெறுபவர்களில் ரோஜர் பென்ரோஸ், ரெயின்ஹார்டு ஜென்சல், ஆண்ட்ரியா கெஸ் ஆகிய 3 பேருக்கும் நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. கருந்துளை பற்றி ஆய்வு நடத்தியதற்காக அவர்களுக்கு இந்த கௌரவம் வழங்கப்பட்டுள்ளது.
இலக்கியத் துறையில் அமெரிக்காவை சேர்ந்த பெண் கவிஞர் லூயிஸ் என்பவர் இலக்கியத் துறைக்கான நோபல் பரிசு பெற தேர்வு செய்யப்பட்டுள்ளார். வேதியியல் துறைக்கான நோபல் பரிசு பிரான்ஸ் நாட்டை சேர்ந்த இமானுவேல் சார்பென்டியர், அமெரிக்க நாட்டை சேர்ந்த ஜெனிஃபர் ஏ டவுட் கானா ஆகிய இரு பெண்களுக்கு வழங்க அறிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் இருவருக்கும் மரபணு சார்ந்த ஆராய்ச்சி செய்த காரணத்திற்காக நோபல் பரிசு வழங்கப்பட உள்ளது.
அமைதி நோபல் பரிசு உலக உணவு அமைப்புக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. 58 வருடங்களாக வறுமையில் வாடுபவர்களுக்கு உணவு அடித்ததற்காக அந்த நோபல் பரிசு உலக உணவு அமைப்புக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு இன்று அறிவிக்கப்பட்டது. அதில் பால்.ஆர். மில்க் ரோம், ராபர்ட் வில்சன் ஆகிய இருவரும் இடம் பெற்றுள்ளனர். ஏல கோட்பாட்டின் மேம்பாடு,எழுத்திற்கான வடிவமைப்பு ஆகியவற்றை உருவாக்கிய காரணத்திற்காக அவர்கள் இருவருக்கும் நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.