டெல்லியில் கொரோனா ஊரடங்கின் போது சீரடைந்து மாசு தற்போது மீண்டும் அதிகரிக்க தொடங்கி இருப்பதால் அங்கு நாளுக்கு நாள் நிலைமை மோசமாகி வருகிறது.
இன்றும் அதிகாலை முதல் பல இடங்களில் மாசு அடர்ந்து காணப்பட்டதால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். நாட்டின் தலைநகரான டெல்லியில் வாகனப் பெருக்கம் மற்றும் அதிக அளவிலான சிறு தொழிற்சாலைகள் காரணமாக சுற்றுச்சூழல் பாதிப்பு அதிகரித்தது. குறிப்பாக காற்றில் மாசு அளவு அதிகமாகி இயல்பு வாழ்க்கையை நடத்த முடியாத அளவுக்கு நிலைமை மோசமானது.
கடந்த ஏப்ரல் மாதம் தொடங்கி சுமார் ஐந்து மாத காலத்திற்கு கொரோனா ஊரடங்கு அமலில் இருந்ததால் அங்குள்ள சாலைகளில் வாகன பெருக்கம் முற்றிலுமாக குறைந்தது. இதனால் மாசு ஏற்படுவது குறைந்து தெளிவான சூழல் நிலவியது. தற்போது ஊரடங்கு தளர்த்தப்பட்டு மீண்டும் வாகன பெருக்கம் அதிகரித்து இருப்பதால் மாசு அளவும் அதிகரித்துள்ளது. இன்று அதிகாலை முதல் பெட்டர்கன்ஸ், ஜகங்கிற்புறி, ரோகினி போன்ற பல இடங்களில் அடர்ந்த புகைமூட்டம் போல காற்று மாசு நிலவியது.
இதனால் சாலையில் நடந்து செல்வோரும், வாகன ஓட்டிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். மேலும் பலர் கண் எரிச்சல் ,மூச்சுத்திணறல் போன்ற பிரச்சனைகளுக்கு ஆளாகினர். இந்தக் காற்று மாசை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் டெல்லி அரசு தீவிரமாக இறங்கியுள்ளது.