மத்திய மேற்கு வங்க கடல் பகுதியில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 12 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று நாளை அதிகாலை காக்கிநாடாவுக்கு அருகே அருகே கரையை கடக்கக்கூடும்.
இதன் காரணமாக தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வேலூர், திருவள்ளூர், ராணிப்பேட்டை, கிருஷ்ணகிரி, ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும். சென்னை, காஞ்சிபுரம், கோயமுத்தூர், தேனி, திண்டுக்கல், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்ச மழை அளவாக மகாபலிபுரம், பெரியாறு, திருக்கழுக்குன்றத்தில் தலா மூன்று சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது.
மீனவர்களுக்கு எச்சரிக்கை. மத்திய மேற்கு வங்கக் கடல் மற்றும் ஆந்திர கடலோரப் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 55 இருந்து 65 கிலோ மீட்டர் வேகத்தில் இடைவெளி 75 கிலோ மீட்டர் வேகத்தில் விசா வாய்ப்பு இருப்பதால் மீனவர்கள் அடுத்த இரண்டு நாட்களுக்கு மேற்கண்ட பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்றும், குமரிக்கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதியில் பலத்த காற்று மணிக்கு 45 லிருந்து 55 கிலோ மீட்டர் வேகத்தில் பேசுவதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.