தக்காளி குழம்பு செய்ய தேவையான பொருட்கள்:
நாட்டு தக்காளி – 4 பச்சை மிளகாய் – 2 கீறியது
பூண்டு – இரண்டு பல்
தேங்காய் – சிறிதளவு
சீரகத்தூள் – ஒரு டீஸ்பூன்
மிளகாய்தூள் – ஒன்றரை டீஸ்பூன்
மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன்
தனியா தூள் – 2 டீஸ்பூன்
கடுகு, உளுத்தம்பருப்பு – அரை டீஸ்பூன்
பெரிய வெங்காயம் – 1 பொடியாக நறுக்கியது
கறிவேப்பிலை – சிறிதளவு
கொத்தமல்லி – சிறிதளவு பொடியாக நறுக்கியது
எண்ணெய், உப்பு – தேவையான அளவு.
செய்முறை:
முதலில் கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு, உளுந்தம்பருப்பு, கருவேப்பிலை, தேங்காயை போட்டு பொரிந்ததும், வெங்காயம், பச்சை மிளகாய், பூண்டு சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
அதனுடன் மஞ்சள்தூள், சீரகத் தூள், மிளகாய்த்தூள், தனியாத்தூள் போட்டு வதக்கி நறுக்கிய தக்காளியை போட்டு உப்பு சேர்த்து தேவையான அளவு தண்ணீர் வைத்து எண்ணெய் பிரிந்து வந்ததும் கொத்தமல்லிதலை தூவி இறக்கவும். சுவையான தக்காளி குழம்பு தயார்.