வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலமானது நாளை காலை கரையைக் கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது.
தென்கிழக்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதியானது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருமாறியுள்ளது எனவும், இத்தாழ்வு மண்டலம் விசாகப்பட்டினத்தின் தென்கிழக்கு பகுதியில் நிலைகொண்டு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் இன்று காலை தகவல் அளித்தது. இதன் காரணமாக சென்னையில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக தகவல் அளித்தது. இந்நிலையில் வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலமானது நாளை அதிகாலை கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் சற்றுமுன் தகவல் அளித்துள்ளது.