வடகொரியா நாட்டில் எந்த மூலைக்கும் எடுத்து செல்லும் வகையில் உலக அளவில் மிகப்பெரிய அணு ஆயுத ஏவுகணை ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது
வடகொரியாவில் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் இந்த ஏவுகணையை வல்லரசு நாடுகளால் கூட அளிக்க முடியாது என்பது மட்டுமல்லாமல் எதிர்ப்புகளை தகர்க்கும் சக்தி கொண்டது இந்த ஏவுகணை எனக் கூறப்படுகிறது. ஆளும் தொழிலாளர் கட்சியின் 75வது ஆண்டு விழாவை முன்னிட்டு வடகொரியாவில் நடத்தப்பட்ட விழாவில் ராணுவ அணிவகுப்பு மற்றும் உலகின் அணைத்து நாடுகளுக்கு சிம்ம சொப்பனமாக மாற உள்ள ஹவாசாங் -16 என்ற ஏவுகணையை வடகொரியா அறிமுகப்படுத்தியது.
இந்த ஏவுகணை பற்றி உலகில் உள்ள பல்வேறு அணு ஆயுத நிபுணர்கள் வெளியிட்ட தகவலால் உலக நாடுகளுக்கு அச்சம் எழுந்துள்ளது. வடகொரியாவின் இந்த ஹவாசாங் -16 ஏவுகணை உண்மையில் அறிமுகப்படுத்தப்பட்டு இருந்தால் அது அமெரிக்காவிற்கு கடும் அச்சுறுத்தலாக அமையும் என்று அணு ஆயுத ஆய்வாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். இந்த ஏவுகணையை வட கொரியா நாட்டில் இருந்து ஏவிய சில நொடிகளில் அமெரிக்காவில் உள்ள மாகாணத்தில் வாழும் மக்கள்தொகையில் இரண்டரை மில்லியன் மக்கள் மொத்தமாக சாம்பல் ஆவதற்கான வாய்ப்புகள் உள்ளது.
வடகொரியா தொடர்ந்து அணு ஆயுத சோதனை நடத்துவது, புதுப்புது ஏவுகணைகளை விண்ணில் ஏவி பரிசோதிப்பது உள்ளிட்ட முயற்சியில் ஈடுபட்டு வருவதற்கு அமெரிக்கா கண்டனம் தெரிவித்து வருகிறது. மேலும் வடகொரியா மீது பொருளாதார தடை அமெரிக்கா விதித்திருந்தது. இந்த நிலையில் தற்போது வடகொரியா புதிய ஏவுகணையை தயாரித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.