தமிழக முதலமைச்சர் பழனிச்சாமி அவர்களின் தாயார் திருமதி தவசாயி அம்மாள் உடல்நலக்குறைவின் காரணமாக நேற்று இரவு காலமானார்.சேலம் மாவட்டம் எடப்பாடி வட்டத்திற்குட்பட்ட சிலுவம்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் தவசாயி அம்மாள். 93 வயதான இவர் நேற்று இரவு (திங்கள் கிழமை) சுமார் 11 மணி அளவில் இயற்கை எய்தினார். இவருக்கு பழனிச்சாமி,கோவிந்தராஜ் ஆகிய இரு மகன்களும் விஜயலட்சுமி என்ற ஒரு மகளும் இருப்பது குறிப்பிடத்தக்கது. தனது தாயார் காலமானது தெரிந்ததும் முதலமைச்சர் அவர்கள் தனது அரசு நிகழ்ச்சிகளை ரத்து செய்து விட்டு உடனடியாக சொந்த ஊர் திரும்பியுள்ளார்.
Categories